Enter your Email Address to subscribe to our newsletters

சித்ரதுர்கா, 25 டிசம்பர் (ஹி.ச.)
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 48-ல், கோர்லத்து கிராஸ் அருகே ஒரு கோரமான பேருந்து விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 9-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்தப் பேருந்தில் மொத்தம் 29 பேர் பயணம் செய்ததாகத் தெரிய வந்துள்ளது.
எதிர்திசையில் வந்துகொண்டிருந்த ஒரு தனியார் ஸ்லீப்பர் கோச் பேருந்தின் மீது, சாலையின் தடுப்பைத் தாண்டி வந்த ஒரு சரக்கு வாகனம் மோதியதில், பேருந்து முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்த 17-க்கும் மேற்பட்ட பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
மற்றவர்களும் பலத்த காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தேசிய நெடுஞ்சாலை 48-ல் நடந்துள்ளது. ஒரு பக்கத்திலிருந்து வந்த சரக்கு் வாகனம், சாலையின் தடுப்பைத் தாண்டி, எதிர்திசையில் அதிவேகமாக வந்த பேருந்தின் மீது மோதியது. இந்த கோரமான மோதலால், ஸ்லீப்பர் கோச் பேருந்து சாலையின் நடுவில் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்துக்கு லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. ஹிரியூரிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லாரி, பெங்களூரிலிருந்து சிவமொக்கா நோக்கிச் சென்ற பேருந்துடன் மோதியுள்ளது.
காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக ஹிரியூர் கிராமப்புற காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM