Enter your Email Address to subscribe to our newsletters

சிதம்பரம், 25 டிசம்பர் (ஹி.ச.)
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு விழாக்கள் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகின்றன
அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவ விழா இன்று (டிசம்பர் 25) கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் உள்ளே உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு. மந்திரங்கள் முழங்க உத்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். பின்னர் தீபாராதனை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து இன்று முதலே, பஞ்ச மூர்த்தி வீதியுலா துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய விழாவாக ஜனவரி 2ம் தேதி தேரோட்டமும், 3ம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / vidya.b