Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 25 டிசம்பர் (ஹி.ச)
உலக அமைதிக்கான தத்துவங்களின் சங்கமம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
அன்பு, கருணை, சமாதானம், தியாகம் போன்ற நற்பண்புகளை உலகத்தாருக்கு பிரகடனப்படுத்தும் பெருநாள் தான், இயேசு கிறிஸ்து பிறப்பு திருநாள்!
புனித நாயகன்; தேவகுமாரன். இயேசுபிரான் பேதமில்லா மனித குலத்தை உருவாக்கிட உழைத்தார். எத்தனை துன்பங்கள் எதிர் வந்த போதும், எதிர்வினை ஆற்றாமல் பொறுமையுடன் புன்னகைத்திருந்தார். தனக்கு தீங்கிழைத்தவர்களை கூட மன்னித்தருள வேண்டுமென இறைத்தந்தையிடம் மன்றாடி கேட்டுக்கொண்ட மகத்தான புனித ஆத்மா தான் இயேசுபிரான்! அவரது அறநெறி போதனைகள் என்றும் வற்றாத ஜீவநதி.
அவரது மலைப் பிரசங்கம், உலக அமைதிக்கான தத்துவங்களின் சங்கமம்!! அவர் அவதரித்த இந்நன்நாளை பொன்னாளாக கொண்டாடிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு, என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam