Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 டிசம்பர் (ஹி.ச.)
ஏசு கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (டிசம்பர் 25) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள் பலரும் கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தனது பதிவில், அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். இந்த கிறிஸ்துமஸ் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பைக் கொண்டு வந்து அன்பால் நிரப்பட்டும் என பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b