Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.)
எஸ் ஐ ஆர் பணிகளின் போது படிவங்களில் முறையாக விவரங்களை தெரிவிக்காத சுமார் 10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்
மாவட்ட தேர்தல் அலுவலகத்திலிருந்து வாக்காளர்களுக்கு தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
நோட்டீஸ் கிடைத்த வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்படவுள்ள சிறப்பு முகாம்கள் நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் நேட்டிவிட்டி சான்றிதழ் உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எஸ் ஐ ஆர் பணிகள் நவம்பர் நான்காம் தேதி தொடங்கி டிசம்பர் 14ஆம் தேதி உடன் முடிவுற்றது.
வரைவு வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இரட்டை பதிவு, கண்டறிய முடியாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் தமிழகத்தில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் எஸ் ஐ ஆர் பணிகளில் வழங்கப்பட்ட படிவங்களில் வாக்காளர்கள் தங்களுடைய பெயரோ அல்லது உறவினர்கள் பெயர்கள் 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தால் அந்தத் தகவல்களை படிவங்களில் குறிப்பிட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
படிவங்களை முறையாக பூர்த்தி செய்தா வாக்காளர்கள் ,2002 2005 அப்போதைய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த உறவினர்கள் பெயரை குறிப்பிடாத சுமார் பத்து லட்சம் வாக்காளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ் ஆவணமாக கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
தமிழக அரசின் வருவாய் துறை செயலாளர் அமுதா அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், எஸ் ஆர் பணிகளில் படிவங்களை பூர்த்தி செய்வதில் தவறிழைத்த வாக்காளர்கள் நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பித்தால் அதற்கு கால அவகாசம் அதிகம் தேவைப்படும் என்பதாலும் அதற்கான கட்டணம் செலுத்த வேண்டிய உள்ளதால் அதிலிருந்து கட்டண விலக்கு அளித்து
நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் நேட்டிவிட்டி சர்டிபிகேட் கோரி வாக்காளர்கள் விண்ணப்பித்தால் மண்டல தாசில்தார் வாக்காளர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இன்று முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை எஸ் ஐ ஆர் படிவங்கள் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் கோரி வாக்காளர்கள் விண்ணப்பித்தால் உரிய சான்றிதழ்களை கட்டணம் இல்லாமல் வழங்க வேண்டும் என்று வருவாய் துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் சுமார் இரண்டரை லட்சம் வாக்காளர்களும், திருவள்ளூரில் ஒரு லட்சத்து 50 ஆயரம் வாக்காளர்களும் தமிழகம் முழுவதும் 10 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை முறையாக பூர்த்தி செய்தா காரணத்தினாலும் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதாலும் அந்த வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு கூடுதல் ஆவணங்களை பெற்று தகுதியுள்ள வாக்காளர்களை பட்டிலில் சேர்க்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ