ஊதுபத்தி கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!
சேலம், 25 டிசம்பர் (ஹி.ச.) சேலம், சீலநாயக்கன்பட்டி சுபாஷ் நகரில் கோயாஸ் பெர் பியூமரி ஒர்க்ஸ் என்னும் பெயரில் ஊதுபத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதனை பெங்களூருவைச் சேர்ந்த நசீர் நடத்தி வருகிறார். ஆனால் தொழிற்சாலை நிர்வாகத்தை சேலம் மணியனூர்
KSRTC bus catch fire


சேலம், 25 டிசம்பர் (ஹி.ச.)

சேலம், சீலநாயக்கன்பட்டி சுபாஷ் நகரில் கோயாஸ் பெர் பியூமரி ஒர்க்ஸ் என்னும் பெயரில் ஊதுபத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இதனை பெங்களூருவைச் சேர்ந்த நசீர் நடத்தி வருகிறார். ஆனால் தொழிற்சாலை நிர்வாகத்தை சேலம் மணியனூர் சேர்ந்த ஹரிஷ் என்பவர் தலைமையில் கபூர் மேற்பார்வையில் ஊதுபத்தி உற்பத்தி செய்யப்பட்டு தமிழக மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு தொழிற்சாலையிலிருந்து புகை வெளியேறியுள்ளது. இதனைக் கண்ட அந்த பகுதி மக்கள் கிச்சிப்பாளையம் போலீசார் மற்றும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன் பேரில் 5 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடந்த 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி இருப்பது தெரியவந்துள்ளது.

ஊதுபத்தியை உலர வைக்கும் பர்னரில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்து காரணமென போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த தீ விபத்து காரணமாக இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொழிற்சாலை தீ பிடித்து இருப்பதை பார்த்து கண்ணீர் விட்டு கதறுவதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்து குறித்து கிச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN