சன்சாத் கேல் மஹோத்சவ் நிறைவு விழா - காணொலி காட்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு
புதுடெல்லி, 25 டிசம்பர் (ஹி.ச.) ''சன்சாத் கேல் மஹோத்சவ்'' விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா இன்று (டிசம்பர் 25) நடைபெற்றது. நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்ற இந்த விழாவில், டில்லியில் இருந்தபடி காணொலி காட்சியி
சன்சாத் கேல் மஹோத்சவ்  நிறைவு  விழா - காணொலி காட்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு


புதுடெல்லி, 25 டிசம்பர் (ஹி.ச.)

'சன்சாத் கேல் மஹோத்சவ்' விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா இன்று (டிசம்பர் 25) நடைபெற்றது. நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்ற இந்த விழாவில், டில்லியில் இருந்தபடி காணொலி காட்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறுகையில் , பெற்றோர், தங்கள் குழந்தைகளை விளையாட ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு என்பது கற்றலின் ஒரு பகுதி மட்டுமல்ல; உடல், மன ஆரோக்கியத்துக்கும் விளையாட்டு முக்கியம். விளையாட்டு வீரர்கள் தங்களது வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டின் வெற்றிக்காவும் விளையாடுகின்றனர், என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விழாவில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார்.

Hindusthan Samachar / vidya.b