தவெக உடன் டிடிவி தினகரன் , ஓபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தை : செங்கோட்டையன்
கோவை, 25 டிசம்பர் (ஹி.ச.) காங்கிரஸ் உடன் கூட்டணி என்ற எவ்வித கருத்தும் தற்போது இல்லை என தெரிவித்துள்ள த.வெ.க நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணி குறித்து தங்கள் கட்சியினருடன் பேசி வருவது
செங்கோட்டையன்


கோவை, 25 டிசம்பர் (ஹி.ச.)

காங்கிரஸ் உடன் கூட்டணி என்ற எவ்வித கருத்தும் தற்போது இல்லை என தெரிவித்துள்ள த.வெ.க நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணி குறித்து தங்கள் கட்சியினருடன் பேசி வருவது உண்மைதான் என்றும் விரைவில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக வெற்றிக் கழகத்துடன் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணி இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அனைத்து மாவட்ட செயலாளர்களிலும் பெரும்பாலானோர் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளதாக கூறினார்.

அந்த கருத்துகளின் அடிப்படையில் இரண்டு நாட்களுக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என பேசப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். எந்த காலகட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அ.தி.மு.க வில் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், துரோகத்திற்கு இடம் அளிக்க மாட்டோம் என்றும் அவர்கள் தெளிவாக கூறி உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

விரைவில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கூறினார். காங்கிரஸ் கட்சியுடன் இணையும் வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, அத்தகைய எந்த கருத்தும் இல்லை என பதில் அளித்தார்.

“இணைய வேண்டிய இடத்தில் இணைவோம்” என்றும் கூறினார். ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொள்கை ரீதியாக யாரை எதிர்க்கிறோம் என்பதை மக்களே கோஷமிட்டு வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.

தனது பார்வையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையை காணலாம் என்றும், நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அ.தி.மு.க வில் இருந்து சிலர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வருவார்களா? என்ற கேள்விக்கு, அ.தி.மு.க வில் இருந்து சிலர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வருவார்களா?என்ற கேள்விக்கு, “வருவார்கள்” என உறுதியாக பதில் அளித்தார்.

பாரதிய ஜனதா கட்சியை கொள்கை ரீதியாக எதிர்ப்பதாக ஏற்கனவே தெரிவித்து உள்ளதாகவும் கூறினார். டி.டி.வி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா? என்ற கேள்விக்கு, ஒவ்வொருவரும் பேசிக்கொண்டு இருப்பது உண்மை என்றும், ஆனால் அவர்கள் எப்போது முடிவெடுப்பார்கள் என்பது தற்போது தெரியவில்லை என்றும் விளக்கினார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னைப் போன்றவர்களுடன் அவர்கள் பேசி வருவதாகவும்,

நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம் என்றும் கூறினார். தனது அரசியல் பயணம் குறித்து பேசுகையில், புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி காலம் போல மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

விஜய் அவர்களுக்கு வரும் 27, 28 தேதிகளில் மலேசியாவில் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு எந்தெந்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் என்பது அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

மலேசியாவில் விதிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகள் குறித்த கேள்விக்கு, கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்படுகின்றன என்றாலும், அவற்றைத் தாண்டி மக்கள் மனதில் விஜய் இடம் பிடித்து உள்ளதாக கூறினார்.

2026 ஆம் ஆண்டு அவர் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என செங்கோட்டையன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam