Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 25 டிசம்பர் (ஹி.ச.)
திருமலையில் இலவச தரிசன டோக்கன் வாங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கிறிஸ்மஸ் விடுமுறை, அரையாண்டு தேர்வு விடுமுறை ஆகியவற்றை பயன்படுத்தி ஏழுமலையான வழிபடுவதற்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இன்று திருப்பதிக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதன் காரணமாக சுமார் 4 கிலோ மீட்டர் நீள வரிசையில் 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை இலவசமாக வழிபட வேண்டிய நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
திருப்பதியில் உள்ள இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுண்டர்களில் நாளை ஏழுமலையானை வழிபடுவதற்கு தேவையான இலவச தரிசன டோக்கன்களை வாங்க ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இதனால் பக்தர் இடையே கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஆகியவை ஏற்பட்டு அவர்களை சமாளித்து இடையூறுகள் ஏற்படாத வகையில் டோக்கன்களை கொடுத்து அனுப்பும் பணியில் தேவஸ்தான விஜிலென்ஸ் துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam