Enter your Email Address to subscribe to our newsletters

சான் பிரான்சிஸ்கோ, 25 டிசம்பர் (ஹி.ச.)
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கனரக வாகனங்களை இயக்கும்போது ஏற்பட்ட சில உயிரிழப்பு விபத்துகளைத் தொடர்ந்து, சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய 'ஆபரேஷன் ஹைவே சென்டினல்' நடத்தப்பட்டது.
மேலும் சட்டபூர்வமான குடியுரிமை இல்லாத நிலையிலும், சில மாகாணங்கள் இவர்களுக்கு வர்த்தக ரீதியான டிரைவிங் உரிமங்களை வழங்கியுள்ளது குறித்து தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் கடந்த நவம்பர் 23 முதல் டிசம்பர் 12 வரையில் நடத்தப்பட்ட வாகனச்சோதனையின் போது 49 பேர் பிடிபட்டனர்.
இது குறித்து அமெரிக்க எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
அமெரிக்காவில் சிலர் சட்டவிரோதமாக இருந்துகொண்டு டிரைவர் உரிமம் பெற்று சரக்கு லாரி இயக்குகின்றனர். கடந்த மாதம் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 12 ஆம் தேதி வரை மேற்கொண்ட நடவடிக்கையில் மட்டும் , சட்ட விரோதமாக குடியேறி லாரி இயக்கி வந்த இந்தியர்கள் 30 பேர் உட்பட 49 பேரை கண்டறிந்து கைது செய்துள்ளோம்.
இந்த சோதனையில் இந்தியா தவிர சீனா, ரஷ்யா மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். 2025ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவிலிருந்து 3,200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியாவிற்குத் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இது கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய எண்ணிக்கையாகும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM