Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 25 டிசம்பர் (ஹி.ச.)
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் நேற்று மலைப்பாதையில் உள்ள எட்டாவது கொண்டை ஊசி வளைவில் தகடூர் அதியமான் வளைவு என்று பெயர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் தந்தை பெரியார் வளைவு என பெயர் மாற்றியதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் தந்தை பெரியார் என்று எழுதப்பட்டிருந்த இடத்தில் கருப்பு பெயிண்ட் அடித்து அதன் மீது பிளக்ஸ் பேனரை ஒட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து திராவிட கழகம் மற்றும் திராவிட விடுதலைக் கழகத்தினர்
காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவேடு இரவாக நெடுஞ்சாலைத் துறையினர் பிளக்ஸ் போர்டை அகற்றி மீண்டும் தகடூர் அதியமான் வளைவு என பெயர் மாற்றம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று திராவிட கழகம் சார்பில் முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தகவல் அறிந்து ஏற்காடு போலீசார் ஏற்காடு அடிவாரம் சோதனை சாவடி, மற்றும் 8வது கொண்டை வீசு வளைவு பகுதி 20வது கொண்டை ஊசி வளைவு பகுதி ஆகிய இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் ஏற்காடு மலைப்பாதையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam