Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 25 டிசம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் குழந்தை இயேசு ஆலயம் அருகே ராமேஸ்வரம்
மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் போலீசார் முன்னிலையில் தலையில்
வெடிவைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அட்ராசிட்டியில்
ஈடுபட்டனர்.
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் நாள் கிறிஸ்தவ
பெருமக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று இரவு 12.01 மணியளவில் கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவதற்கு முன்பாக பல்வேறு
பகுதிகளிலும் முன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் விதமாக குடில்கள்
அமைத்து பிரார்த்தனைகளோடு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம்
தங்கச்சிமடம் குழந்தை இயேசு தேவாலயம் அருகே டிஜே பாடல் இசைக்கப்பட்டு ஏராளமான
வைஃப் செய்து கொண்டாடினர்.
இதற்கிடையே ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டத்தில் இறங்கிய
இளைஞர்கள் சிலர் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர் அதிலும் குறிப்பாக இளைஞர் ஒருவர்
தலையில் வெடியை வைத்துக்கொண்டு தாறுமாறாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை
அச்சுறுத்தும் விதமாக வெடியை வெடித்தனர் போலீசார் முன்னிலையில் அரங்கேறிய இந்த
காட்சி பலருக்கு அச்சுறுத்தலை ஏற்பதடுத்தும் விதமாக அமைந்தது.
Hindusthan Samachar / GOKILA arumugam