Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பரங்குன்றம், 26 டிசம்பர் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கள்ளத்தி மரம் உட்பட அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அலுவலகத்தில் மனு வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறுகையில்:
இஸ்லாமிய மதம் கிறிஸ்தவ மதம் உருவாவதற்கு முன்பாக 3000 ஆண்டுகளுக்கு பழமையானது. இந்த கோவில் நக்கீரர் வரலாறு உடையது.
பழமையான மலையில் திடீரென ஒரு தர்கா ஆக்கிரமிப்பு. ஏற்கனவே லண்டன் பிரிவியூ கவுன்சில் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக முழுவதும் முருக பக்தர் மத்தியில் கோவத்தையும், எழுத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள்.
திருக்கோவில் என்று சொன்னால் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் இருப்பது தான் அடையாளம். இது குடவரைக் கோயிலாக உள்ளது ஆனால் ஒட்டுமொத்த மலையும் சிவன். மலையில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு அங்கு பினங்களை கொண்டு வந்து புதைப்பது தற்போது இந்த விளக்கு இருக்கும் இடம் தர்காவுக்கு சொந்தம் என்று சொல்லப்படுகிறது. தற்போது ஒரு தீர்த்தத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். அங்கு 15 தீர்த்தங்கள் உள்ளது.
கோவிலிலும் மலை மீதும் ஒரு ஸ்தல விருச்சம் உள்ளது அங்கு மலை மீது உள்ள கள்ளத்தி மரத்தில் கொடி ஏற்றி இருக்கிறார்கள்.
தர்காவிற்குள் கட்டுங்கள் ஏன் கள்ளத்தி மரத்தில் கட்டுகிறீர்கள். மலையில் பச்சை பெயின்ட் போற்றினார்கள். அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஆண்டுகளை பழமையான ஆண்டாக மாற்றினார்கள் சமணர் குகைகள், சுனைகள், தலவிருட்சம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மலை முழுவதும் அவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.
அதற்கு அரசும், கோவில் நிர்வாகமும் துணை போகிறது. இது நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
கோவிலை படையெடுப்பின்போது இடிக்கக் கூடாது என்பதற்காக கோயிலில் இருந்து ஒருவர் கொதித்து உயிரிழந்தார்.
அவர் பெயர் குட்டையப்பா பிள்ளை அவர்கள் குடும்பம் இன்று வைராவி வகையறா என்று அழைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து இன்று பூர்ண சந்திரன் முருக பக்தராக தன் உயிரை தியாகம் செய்திருக்கிறார். திமுக கட்சித் தொண்டர் முருக பக்தர் இறந்து போயிருக்கிறார். மந்திரி, ஆட்சியர் என யாரும் வரவில்லை.
அரசு சார்பில் உதவித்தொகை இல்லை. கள்ளச்சாராயம், கரூர் விவகாரம் என இதில் உயிரிழந்தவர்களுக்கு உதவி தொகை ஆனால் முருகனுக்காக இறந்த பூர்ண சந்திரனுக்கு துக்கம் கூட விசாரிக்கவில்லை. அவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.
பாஜக தலைமைக்கு முக்கிய வேண்டுகோள். அவர்கள் தான் இந்துக்களை ஆதரிக்கும் ஒரே கட்சி. நயினார் நாகேந்திரன் பூரண சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்து அமைப்பு சார்பில் 10 லட்சம் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பாஜக நாடாளுமன்ற குழு கரூர் விவகாரத்திற்கு வந்ததை போல திருப்பரங்குன்றத்திற்கு வர வேண்டும். இந்தி கூட்டணி எம்பிகள் தீர்ப்பளித்த நீதிபதியை டிஸ்மிஸ் செய்ய சொல்லி மனு கொடுக்கிறார்கள். பூர்ண சந்திரன் குடும்பத்தை மத்திய குழு சந்தித்து மலையை ஆய்வு செய்து பூர்ண சந்திரனுக்கு நிதி வழங்க வேண்டும்.
மலை உச்சியில் தீபம் ஏற்றும் வரை எங்கள் சட்ட போராட்டம் தொடரும். தற்போது மக்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். அதற்காக அந்த பெண்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் ஆதரவு உள்ளது.
பூர்ண சந்திரன் எப்படி தீப்பிடித்து மாண்டாரோ அதேபோல வங்காளதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக ஆகிவிட்டோம்.
நேற்று ஒருவர் பொது இடத்தில் உயிரோடு எரித்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள். மத்திய அரசு வங்கதேசத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐநா சபையில் முறையிட்டு தேவைப்பட்டால் இந்திய ராணுவத்தை அனுப்பி வங்கதேச சிறுபான்மை இந்துக்களை பாதுகாக்க சர்வதேச சமூகத்தை கேட்கிறேன். பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்த கம்யூனிஸ்டுகள் வங்கதேச விவகாரத்தில் எங்கே போனீர்கள். திண்டுக்கல் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று தான் கம்யூனிஸ்ட் கட்சியின் நினைக்கிறதா. இந்தியாவில் இருக்கும் அனைத்து இந்துக்களும் வங்கதேசத்தில் இருக்கும் இந்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.
பூரண சந்திரன் மற்றும் விபச்சந்தர் ஆகியோர்களுக்கு அஞ்சலி செலுத்தி கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறோம் எனக் கூறினார்.
Hindusthan Samachar / Durai.J