Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 26 டிசம்பர் (ஹி.ச.)
கேரளாவில் அண்மையில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்தது.
அதே சமயம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கணிசமான வெற்றியை பெற்றது.
இடதுசாரிகள் கூட்டணி 4 மாநகராட்சியையும், காங்கிரஸ் கூட்டணி 1 மாநகராட்சியையும், பாஜக கூட்டணி 1 மாநகராட்சியையும் கைப்பற்றியது.
அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய பாஜகவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி முக்கிய சாதனை படைத்தது.
கடந்த 45 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருந்த மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.
இந்நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க இன்று
(டிசம்பர் 26) காலை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில், 101 வார்டு உறுப்பினர்களை கொண்ட மாநகராட்சியில் 51 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர் மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
அதன்படி, மேயர் தேர்தலில் பாஜகவின் விவி ரமேஷ் வெற்றிபெற்றுள்ளார். அவர் சுயேட்சை உறுப்பினர் உள்பட 51 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இடது சாரிகளின் வேட்பாளர் 29 வாக்குகளையும், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் 19 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தனர்.
இதன் மூலம் கேரளாவில் முதல் முறையாக பாஜக கட்சியை சேர்ந்தவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b