Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 26 டிசம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு களஆய்வு மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று
(டிசம்பர் 26) திறந்து வைத்தார்.
வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவி, ரூ.100 கோடியே 80 லட்சத்து 85 ஆயிரம் செலவில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 2,525 திட்ட பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்து, ரூ.386 கோடியே 48 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டிலான 62 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சிறப்புரையாற்றி வருகிறார்.
Hindusthan Samachar / vidya.b