Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 26 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சிக்கு கள ஆய்வு பயணத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று மேற்கொள்கிறாா். அங்கு ரூ.139.41 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்பட ரூ.1,773.67 கோடி மதிப்பிலான 2,559 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் பிரமாண்டமான முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று டிரோன் பறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தடை விதித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி பயணத்தை முடித்துவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் செல்கிறார். அதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக திருவண்ணாமலை மாவட்டத்திலும் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் வருகையையொட்டி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தி.மு.க. சார்பிலும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b