கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது பிறப்புறுப்பை கத்தியால் அறுத்த மனைவி கைது
கோவை, 26 டிசம்பர் (ஹி.ச.) அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தை சேர்ந்தவர், பிதான் ஹசாரிகா(33) . இவருடைய மனைவி ஜிந்தி. இவர்கள் கோவை, கணபதி சின்னசாமி நகர் மூன்றாவது வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பிதான் ஹசாரிகா அத்திப்பாளையம் பிரிவில் உள்ள
கைது


கோவை, 26 டிசம்பர் (ஹி.ச.)

அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தை சேர்ந்தவர், பிதான் ஹசாரிகா(33) . இவருடைய மனைவி ஜிந்தி. இவர்கள் கோவை, கணபதி சின்னசாமி நகர் மூன்றாவது வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

பிதான் ஹசாரிகா அத்திப்பாளையம் பிரிவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார்.

பிதான் ஹசாரிகாவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேமடைந்த மனைவி ஜிந்தி அடிக்கடி கணவருடன் இது குறித்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பிதான் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் உறங்கச் சென்ற பொழுது அவரது மனைவி மீண்டும் இந்த பிரச்சனை குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.பின்னர் இருவரும் உறங்க சென்றுள்ளனர்

இதனிடையே ஆத்திரம் அடைந்த மனைவி ஜிந்தி சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து உறக்கத்தில் இருந்த கணவர் பிதானின் பிறப்புறுப்பை அறுத்துவிட்டு வீட்டை பூட்டிக்கொண்டு வெளியேறியுள்ளார்.

பிதானின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பிதான் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது மனைவி ஜிந்தியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam