தொடர் விடுமுறையை முன்னிட்டு குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்!
தென்காசி, 26 டிசம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண
Courtallam Falls


தென்காசி, 26 டிசம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தின தொடர் விடுமுறை காலங்கள் என்பதால் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளமான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக, தற்போது அருவிகளில் தண்ணீரானது சீராக கொட்டி வரும் நிலையில், சீராக கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து தங்களது குடும்பங்களுடன் ஆனந்த குளியல் இட்டு வருகின்றனர்.

இதற்கு காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட 4 அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் காலகட்டமும் தொடங்கி நடைபெற்று வருவதால் ஏராளமான ஐயப்ப பக்தர்களும் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளதால் குற்றாலமானது சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டி வருவதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN