கடலூர் மாவட்டத்தில் 610 பேரை வாரி சுருட்டிய ஆழிப்பேரலை - இறந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி
கடலூர், 26 டிசம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் சுனாமி தாக்கிய 21-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஆழிப்பேரலையில் சிக்கி உயிர் நீத்த தங்களது உறவுகளுக்கு கடலூர் மாவட்ட கடற்கரையோர கிராம மக்கள் கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கடலுக்கு செல்ல
திருப்பதி ஏழுமலையான் கோவில்


கடலூர், 26 டிசம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் சுனாமி தாக்கிய 21-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஆழிப்பேரலையில் சிக்கி உயிர் நீத்த தங்களது உறவுகளுக்கு கடலூர் மாவட்ட கடற்கரையோர கிராம மக்கள் கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கடலுக்கு செல்லாமல் விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி உருவாகி சுனாமி பேரலை தாக்கியதில் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் 2 லட்சம் பேர் பலியாகினர் பல்வேறு கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். இந்த சுனாமி பேரலை தாக்கி பேரழிவு ஏற்பட்டு 21 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு 21 ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.

சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று திரேஸ்பரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி சுனாமியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இனிமேல் இது போன்ற பேரழிவு வரக்கூடாது என ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து கடல் மற்றும் மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மேலும் கடல் மாதாவிற்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். சங்கு குளி மீனவர்கள் சங்க தலைவர் இசக்கி முத்து முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் பங்கேற்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam