Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 26 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (டிசம்பர் 26) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவியை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, அவரை தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவர் ஏழுமலையானை தரிசனம் செய்து வழிபட்டார்.
தரிசனத்திற்குப் பிறகு, ரங்கநாயக்க மண்டபத்தில் அர்ச்சகர்கள் அவருக்குப் பட்டு ஆடைகளை அணிவித்து, இறைவனின் பிரசாதங்களை வழங்கிக் கௌரவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b