Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.)
கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் வாங்கிய மாவட்டங்களில் பறவை காய்ச்சல் அதிகரிப்பு எதிரொலியாக கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் கோழி மற்றும் மாட்டு இறைச்சி வண்டிகளில் கிரிமி நாசினி உள்ளிட்ட மருந்துகள் அடிக்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் பறவை காய்ச்சலின் அறிகுறிகளான மூன்று முதல் ஐந்து நாட்கள் தொடர் காய்ச்சல், சுவாசக் கோளாறு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.
அறிகுறிகள் தெரிந்தால் ரத்த பரிசோதனை மேற்கொண்டு பிறகு பறவை காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டால் பாதிக்கப்பட்டவர் தனிமையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வரை பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை, பொதுமக்கள் தேவை இன்றி பீதி அடைய வேண்டாம் எனவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பறவைகளுக்கு மட்டுமே பறவைக் காய்ச்சல் வந்துள்ளது. பறவைகளிடமிருந்து மனிதருக்கு தற்போது பரவவில்லை, பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவைகளின் மலம் எச்சில் உள்ளிட்டவற்றில் இருந்து மனிதருக்கு பறவை காய்ச்சல் பரவும். மனிதருக்கு பறவை காய்ச்சல் பரவினால் பாதிக்கப்பட்டவர் விடும் மூச்சுக்காற்று மூலம் மற்றொரு மனிதருக்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.
கோழி இறைச்சி கடைகள் மற்றும் கோழி பண்ணைகளில் பணிபுரிபவர்கள் தசை வழியாக பறவை காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. கோழி கறி கடைகளில் பணிபுரிவோர் கட்டாயம் கையுறை அணிந்து பணிபுரியவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பறவை காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தான டானிக் ப்ளூ என்ற மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது.
கோழி,சேவல், கொக்கு, நாரை, புறா,வாத்து உள்ளிட்ட உணவு பறவைகளிலிருந்து பறவை காய்ச்சல் பரவுகிறது. பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவைகள் 7 முதல் 10 நாள் வரை உயிரோடு இருக்கும், அதன் பிறகு மயங்கி விழுந்து இறந்து விடும்.
பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட பறவை காய்ச்சல் சோதனையில் நாமக்கல்லில் வளர்க்கப்படும் கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் தொற்று உறுதியாகவில்லை என முதற்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ