Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 டிசம்பர் (ஹி.ச.)
பேஸ்புக், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தும் இந்திய வீரர்களுக்கு இந்திய ராணுவம் அவ்வபோது விதிமுறைகளை வகுத்து வருகிறது.
இதனை பயன்படுத்தும் வீரர்கள் வெளிநாட்டு உளவு அமைப்புகளிடம் தகவல்களை கசிய விடக்கூடாது என்பதற்காக அவ்வபோது விதிமுறைகள் மாற்றி அமைப்பது வழக்கம்.
அந்த வகையில் இந்திய ராணுவம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தகவல்களை தெரிந்து கொள்ள இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பதிவுகளை பார்க்கலாம். ஆனால், அதல் பதிவுகள் வெளியிடுவது, கருத்து பதிவேற்றம் செய்வது, பதிவுகளை பகிர்வது, விருப்பம் தெரிவிப்பது அல்லது செய்தி அனுப்புவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
எக்ஸ், யூடியூப், மற்றும் குவாரா ஆகிய சமூகஊடகங்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.
ஸ்கைப், வாட்ஸ் அப், டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய செயலிகள் மூலம் பொதுவான தகவல்களை பரிமாறி கொள்ளலாம்.
அதுவும் தெரிந்த நபர்களுடன் மட்டுமே தகவல்களை பரிமாறி கொள்ளலாம். தகவல்களை பெறுபவர் யார் என்பதை உறுதி செய்து கொள்வது முக்கியம்.
லிங்க்ட் இன் இணையதளத்தில் வேலைவாய்ப்பு குறித்து விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM