பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில், சேலத்தில் வரும் 29ஆம் தேதி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்
விழுப்புரம், 26 டிசம்பர் (ஹி.ச.) பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் ராமதாஸ் தலைமையில், சேலத்தில் வரும் 29ஆம் தேதி பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தாங்கள் தான் உண்மையான
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில், சேலத்தில் வரும் 29ஆம் தேதி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்


விழுப்புரம், 26 டிசம்பர் (ஹி.ச.)

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் ராமதாஸ் தலைமையில், சேலத்தில் வரும் 29ஆம் தேதி பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், தாங்கள் தான் உண்மையான பாமக எனவும், பாமக என்ற பெயரில் ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கக்கூடாது எனவும், சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அன்புமணி ராமதாஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ராமதாஸ் ஆதரவாளரும், அக்கட்சியின் கௌவுரவ தலைவருமான ஜி.கே. மணி எம்.எல்.ஏ. விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் கூறியதாவது,

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ராமதாஸ் தலைமையில் வருகின்ற 29.12.2025 (திங்கட்கிழமை) அன்று சேலம் மாநகரில் ஐந்துரோடு பகுதியில் உள்ள திருமண அரங்கில் மாநில செயற்குழுக் கூட்டமும் மாநில பொதுக்குழு கூட்டமும் நடைபெற இருக்கிறது.

இந்த பொதுக்குழுவில் தமிழ்நாடு புதுச்சேரி இருமாநிலத்திலும் உள்ள எல்லா நிர்வாகிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த செயற்குழுவும் பொதுக்குழுவும் திட்டமிட்டபடி சரியாக நடக்கும். குறிப்பாக 2026 புத்தாண்டை வரவேற்போம்.

2025க்கு விடை கொடுப்போம். என்ற வகையில் நடைபெறுகிற செயற்குழு பொதுக்குழு ஆகும். அதிலும் குறிப்பாக இந்த செயற்குழுவும் பொதுக்குழுவும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது பார்க்கப்படுகிறது.

காரணம் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள இந்த சூழலில் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிற செயற்குழு பொதுக்குழு என்ற காரணத்தால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது.

இந்த செயற்குழு பொதுக்குழுவில் கூட்டணி குறித்து அறிவிப்பார்கள் என்று தமிழ்நாடு அளவிலும் தேசிய அளவிலும் பார்க்கப்படுகிற ஒருமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. கட்சி விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது தேர்தல் ஆணயத்தின் மீது. ஆனால் அன்புமணி தரப்பில் எதற்கு அங்கே வர வேண்டும். தேவையில்லாமல் தேர்தல் ஆணையத்துடன் ஒன்றாக சேர்ந்து அங்கே வருகிறார்கள். இது குறித்து நீதிபதி கூட கேட்டார்கள். “உங்களை வழக்கில் சேர்க்கவில்லையே நீங்கள் ஏன் வந்தீர்கள்?” என்று. நாங்கள் சில விளக்கம் சொல்கிறோம் என தெரிவித்தனர். இதனையடுத்து விளக்கம் சொல்வதற்கு அனுமதித்தார்கள்.

அதை விசாரித்துவிட்டு பெண் நீதியரசர், கேட்டார் ராமதாஸுக்கு எத்தனை மகன் என்று கேட்டார். நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒரு மகன்தான் என்று சொன்ன உடனே அப்பாவுடன் சேர்ந்து செயல்படலாமே? என்றார்.

தேர்தல் ஆணையம் என்ன சொன்னார்கள் என்றால் அன்புமணி கடிதம் கொடுத்தன் அடிப்படையில் கடிதம் கொடுத்தோம். இப்போது பிரச்சனை இருக்கிறது என்பது தெரிய வந்த காரணத்தால் யார் தலைவர் என்ற பிரச்சனையை தீர்க்க உரிமையியல் நீதிமன்றம் செல்லுங்கள் என்றும், அன்புமணி தலைவர் இல்லை என்றும் கூறி வழக்கை முடித்து வைத்துவிட்டார்கள்.

அன்புமணி கட்சியின் தலைவர் இல்லை. அன்புமணியை கட்சியிலிருந்து, ராமதாஸ், நீக்கி விட்டார். அன்புமணி கட்சி பொறுப்பிலும் இல்லை. உறுப்பினரும் இல்லை. அவர் கூட இருக்கிறவர்கள், ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்றும், தேர்தல் ஆனையத்துக்கு மறுபடியும், கடிதம் கொடுக்கிறது எதை காட்டுகிறது என்று சொன்னால் தேர்தல் நெருங்கி வருகிறது, இந்த நேரத்தில் விருப்ப மனு இவ்வளவு வாங்கி இருக்கிறோம். பாட்டாளி மக்கள் கட்சி எங்களிடம் இருக்கிறது. எங்களுடன் கூட்டணி பேசுங்கள்.

எங்களுக்கு அதிகமாக செல்வாக்கு இருக்கிறது என்று போலியாக ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றம் செய்து கூட்டணி பேசுவதற்கு முயற்சி செய்யும் ஒரு நடவடிக்கையாகத் தான் பார்க்கிறோம். இது உண்மை இல்லை.

இது மக்களை திசை திருப்புவதற்கு பொதுக்குழு நடத்த முடியாது அதிகாரம் இல்லை என்று சொல்லி மக்களை திசை திருப்புவதற்கும் கூட்டணி கட்சிகளோடு பேசுவதற்கும் ஒரு நாடகமாக இருக்குமே தவிர இது உண்மையல்ல.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b