தொடர் விடுமுறையை முன்னிட்டு பழனி கோவிலில் குவியும் பக்தர்கள்
திண்டுக்கல், 26 டிசம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கோயில் தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து
Palani Murugan Temple


திண்டுக்கல், 26 டிசம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால் கோயில் தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மலை அடிவாரம் கிரிவலப் பாதையில் பல்வேறு காவடிகள் எடுத்து அரோகரா முழக்கத்துடன் கிரிவலம் வந்து பக்தர்கள் மலை சென்று வருகின்றனர்.

கோயிலுக்கு கூட்டமும் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கூட்டமும் ஏராளமாக குவிந்துள்ளது. பக்தர்கள் கூட்டம் காரணமாக வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கும் வழியாக யானை பாதையில் மலை ஏறவும் படிப்பதில் கீழே இறங்கவும் ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

மலைக்கோயிலிலும் இலவச, கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் காத்துள்ளனர். இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் பக்தர்களுக்கு, விரைவாக சாமி தரிசனம் செய்யவும் மற்றும் அடிப்படை தேவைகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது பக்தர்கள் பாதுகாப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN