Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 26 டிசம்பர் (ஹி.ச.)
பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் வீரியமாகி கொண்டே இருக்கிறது.
தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்து அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ராமதாஸ் தரப்பு டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதன் விளைவாக பாமக உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதற்கு உரிமை இல்லை என நீதிமன்றம் கூறிவிட்டது. இது அன்புமணி தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், தாங்கள் சிவில் நீதிமன்றத்தில் வழக்கை எதிர் கொள்ள தயார் என தடாலடியாக அறிவித்து, கட்சி பணிகளையும் அன்புமணி தரப்பு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அன்புமணிக்கு பாமகவின் தலைவர், பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த உரிமை இல்லை என ராமதாஸ் தரப்பு அன்புமணி தரப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாமக என்ற பெயரில் அரசியல், தேர்தல் என்று நிர்வாக நடவடிக்கை மேற்கொண்டால் சட்டப்படி குற்றம் என்றும் நாளிதழ்கள் வாயிலாக ராமதாஸ் தரப்பில் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam