பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் காவல்துறை இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்?– உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.) பிரபல youtuber சவுக்கு சங்கரை கைது செய்வதில் காவல்துறை இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பணம் கேட்டு மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல யூடிபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீ
Savuku


சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.)

பிரபல youtuber சவுக்கு சங்கரை கைது செய்வதில் காவல்துறை இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பணம் கேட்டு மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல யூடிபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னிடம் உள்ள பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நிபந்தனை விதித்துள்ளது.

தேவைப்படும் பட்சத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தும், சாட்சிகளை கலைக்கும் நோக்கில்

செயல்படக்கூடாது எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது

சவுக்கு சங்கரை கைது செய்வதற்கு காவல் துறையினர் தனிப்பட்ட ஆர்வம் காட்டுவது ஏன் ? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்

காவல்துறையினர் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

காவல்துறையால் தான் தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது எனவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.

புகார் அளித்த அடுத்த நாள் அதிகாலையில்

அவசர அவசரமாக கைது செய்ய வேண்டியது நோக்கம் என்ன ?

நீதிமன்றம் கேள்வி.எழுப்பிவுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ