Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 26 டிசம்பர் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தவெக அலுவலகத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நிர்வாககுழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் மாவட்ட செயலாளர் பிரதீப்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை பொறுப்பாளர்களிடம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது;
தமிழகத்தில் 97இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் எஸ்ஐஆர் பணிகளின்போது கூடுதலாக 69இலட்சம் வாக்காளர்கள் சேர்த்ததற்கு பீகாரில் போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழ்நாட்டில் 97இலட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர் இதில் இறந்தவர்கள் இருக்க கூடும் வேறு இடத்திற்கு சென்றவர்கள் இருக்கலாம் என இரட்டை வாக்குகள் உள்ளவர்கள் இருக்காலாம்.
இருப்பினும் தவெகவினர் தேர்தல் பயணங்களில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. அதில் உயிர் மூச்சாக கருதி வாக்காளர்களை சேர்க்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் நாங்கள் உங்களுடன் இணைந்து பணியாற்ற வந்துள்ளோம்.
எல்லோரும் செங்கோட்டையன் சென்று எங்கே போய் சேர்ந்துள்ளார் என்றார்கள்.
நான் சேர்ந்த இடம் கோட்டைக்கு செல்லும் இடமாகதான் இருக்கும். புரட்சிதலைவர் புரட்சிதலைவி ஆகியோரிடன் பயணித்த எனக்கு மூன்றாவது தலைவரோடு பயணிக்க உங்களால் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தவெக தலைவரிடத்தில் நான் காணுகிறபோது தனக்கு மகிழ்ச்சி மட்டும் அடையவில்லை. அவர் மனம் திறந்து பேசினார். அதற்கு நான் கொடுத்து வைத்தவன். நமது கழப்பணியில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் 18வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து பணியை நிறைவு செய்து தமிழகத்தில் முதல் மாவட்டமாக திகழ அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
தவெகவினரின் உற்சாகத்தை பார்க்கும்போது மகிழ்ச்சி மட்டும் அல்ல புதிய இரத்தம் பாய்ச்சுவதைபோல் உள்ளத்தில் இருந்தெ கொண்டு உள்ளது ய இளைஞர்களாக உள்ள அனைவருடன் விரைந்து பணியாற்ற கூடியவர்கள் என்னோடு வந்த அனைவரும் உங்களோடு இணைந்து பணியாற்ற உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க குறைந்த நாட்களே உள்ளது எனவே அனைவரும் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் தற்போது வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பவர்கள் விண்ணப்பம் வழங்கியவர்கள்தான் சேர்க்கப்பட்டுள்ளனர். விடுபட்ட வாக்காளர்களின் முழுமையான பட்டியலில் நாம்மிடம் உள்ளது அவர்களை சந்தித்து பெயர்களை சேர்க்கும் பணியை மேற்கொள்ளுங்கள். இந்தபணி எந்த இயக்கத்தில் இல்லை ஆகவே வரலாறு படைக்கும் தலைவருக்கு வரலாறு படைக்க உழைத்து கொண்டுள்ளனர்.
இதில் 18வயது முதல் 40வயது உள்ளவர்கள் தவெகவிற்கு வாக்களிப்பார்கள் அதுதான் வரலாறு தமிழகத்தில் புதிய வரலாறு உருவாக போகிறது ஆகவே வாருங்கள் அனைவரும் பணியை விரைந்து மேற்கொண்டு தமிழகத்தில் முதல் மாவட்டமாக திகழ பணியை மேற்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam