மானிய விலையில் விசைத்தறிகளை நவீனமாக்க நெசவாளர்கள் அணுகலாம் - தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தேனி, 26 டிசம்பர் (ஹி.ச.) விசைத்தறிகளுக்கு ஆகும் மின்சாரச் செலவைக் குறைக்க, சோலார் பேனல்கள் அமைப்பதற்கும் அரசு மானியம் வழங்குகிறது. பட்டியல் இனத்தவர் (SC/ST) மற்றும் சிறுபான்மையினருக்கு அதிகபட்சமாக 50% வரை மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்
மானிய விலையில் விசைதறிகளை நவீனமாக்க நெசவாளர்கள் அணுகலாம் - தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


தேனி, 26 டிசம்பர் (ஹி.ச.)

விசைத்தறிகளுக்கு ஆகும் மின்சாரச் செலவைக் குறைக்க, சோலார் பேனல்கள் அமைப்பதற்கும் அரசு மானியம் வழங்குகிறது. பட்டியல் இனத்தவர் (SC/ST) மற்றும் சிறுபான்மையினருக்கு அதிகபட்சமாக 50% வரை மானியம் வழங்கப்படுகிறது.

இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு 3 ஆண்டுகள் பழமையான சாதாரண விசைத்தறிகளை நாடாயில்லா ரேபியர் தறிகளாக தரம் உயர்த்த விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டத்தின் கீழ் மூலதன மானியங்கள் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின்படி, வழக்கமான விசைத்தறிகளை, தரம் உயர்த்துவதற்காக 50 சதவீதம் மூலதன மானியம் அல்லது ரூ.1 லட்சம் (ஒரு தறிக்கு) இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 10 தறிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் மானிய விலையில் தறிகளை நவீனமாக்கிட, புதிய தறிகளை கொள்முதல் செய்ய அல்லது பொது சேவை மையம் நிறுவ விருப்பமுள்ளவர்கள் tnhandlooms.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b