திருப்பரங்குன்றம் மலை மீது தர்காவிற்கு வழிபாடு செய்ய பிரியாணியுடன் வந்த கேரளாவை சேர்ந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்
சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.) திருப்பரங்குன்றம் மலை மீது தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சர்ச்சை ஏற்பட்டு வந்த நிலையில் போலீசார் மலை முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு கடந்த 3 ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்ல அனுமதி தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கட
Thiru


சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.)

திருப்பரங்குன்றம் மலை மீது தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சர்ச்சை ஏற்பட்டு வந்த நிலையில் போலீசார் மலை முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு கடந்த 3 ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்ல அனுமதி தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி சிக்கந்தர் பாஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மலை மீது உள்ள தர்காவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த 23ஆம் தேதி முதல் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து நாள்தோறும் கேரளாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மலை மீது உள்ள தர்காவில் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மலை மீது உள்ள தர்கா மற்றும் காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர் இன்று கேரளாவை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் தர்காவிற்கு சென்ற நிலையில்,

கேரளா பாலக்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் மலைக்கு செல்ல பிரியாணியுடன் வருகை தந்துதால் காவல்துறையினர் உணவு மற்றும் அசைவ உணவுகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே கடன் சில மாதங்களாக மவை மீது செல்வதற்கு பால் தண்ணீர் குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் மட்டும் கொண்டு செல்ல அனுமதி வழங்கிய நிலையில் இன்று பிரியாணியுடன் வந்த இஸ்லாமியர்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ