Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை சர்தார் படேல் சாலையில், காந்தி மண்டபம் சந்திப்பு முதல் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பு வரை, சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.
மேலும், பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கிண்டியில் இருந்து அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலையில், காலை முதல் நள்ளிரவு கடந்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில்,
காந்தி மண்டபம் முதல் ஜி.எஸ்.டி., சாலை வரை, தற்போதுள்ள நான்கு வழித்தட சாலையை, ஆறு வழித்தடமாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியுள்ளது.
சுமார் 30 கோடி செலவில் 2.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஐஐடி முதல் ராஜ்பவன் வரை பகுதியாகவும், ராஜ்பவன் முதல் அண்ணா சாலை மற்றொரு பகுதியாகவும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ