Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியா முழுக்க ரயில் பயணிகளுக்கான கட்டண உயர்வானது, டிசம்பர் 26 ம் தேதி முதல் உயர்த்தப்படும் என ஞாயிற்றுக்கிழமை அதன் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அறிவித்திருந்தார்.
அந்தவகையில்., 215 கிலோ மீட்டர் தூரம் வரையிலான ரயில் பயணக் கட்டணம் உயரவில்லை. 215 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவிற்கு பயணிப்போருக்கு., கிலோ மீட்டருக்கு சாதாரண ரயிலில் பயணம் செய்வோருக்கு கிலோ மீட்டருக்கு ரூ.1 எனவும், மெயில், விரைவு ரயில்களில் பயணிப்போருக்கு சாதாரண பெட்டியில் 2 பைசா கூடுதலாகவும், குளிர்சாதன வசதி, படுக்கை வசதி கொண்ட ரயில்களில் செல்வோர்
2 பைசா கூடுதலாக என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
உதாரணமாக சென்னையிலிருந்து விருத்தாசலம் வரை 213 கி.மீ. ஆகும். அது வரை கட்டணம் உயர்வு இல்லை என்ற போது., அதன்படி குறிப்பிட்ட நகரங்களுக்கான மொத்த கிலோ மீட்டர் தொலைவில் 215 கிலோ மீட்டர் கழித்து விட்டு., மீதமுள்ள கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா., தற்போதைய கட்டணத்திலிருந்து கூடுதலாக உயர்த்திய கட்டணம் பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது.
( சென்னையில் இருந்து)
1.திருச்சி 336 கி.மீ.,
ரூ.1.27.
குளிர்சாதன வசதி ரூ 2.42
2. மதுரை 495 கி.மீ.
2.80.,
ரூ.5.60.
3. ராமேஸ்வரம் 600 கி.மீ. ரூ.3.85. ரூ.7.70.
4. திருநெல்வேலி 653 கி.மீ. ரூ.4.38. ரூ.8.76.
5. கன்னியாகுமரி 742 கி.மீ. ரூ.5.27. ரூ.10.54.
6. கோயமுத்தூர் 495 கி.மீ. ரூ.2.80. ரூ.5.60.
7. சேலம் 333 கி.மீ. ரூ.1.18. ரூ.2.36.
8. பெங்களூரு 354 கி.மீ. ரூ.1.39. ரூ.2.78.
9. திருவனந்தபுரம் 920 கி.மீ. ரூ. 7.05. ரூ.14.10.
10. மும்பை 1280 கி.மீ. ரூ.10.65. ரூ.21.30.
11. புதுடெல்லி 2182 கி.மீ. ரூ.19.67. ரூ.39.30.
மேலும்., கட்டண உயர்த்தப்படா நகர்கள்,
ரயில்வே துறையின் அறிவிப்பின் படி சென்னையிலிருந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, கே.பி.என். குப்பம், பங்காரப்பேட்டை, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம் வரையில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அத்துடன் அந்தந்த பெரிய நகர்களில் இருந்து 215 கிலோ மீட்டர் வரை கட்டணம் உயர்வின்றி பயணிகள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு பயணி எங்கிருந்து பயணம் செய்கிறார்களோ., அங்கிருந்து 215 கிலோ மீட்டர் தூரம் வரை சாதாரணம் கட்டணமே.
அதற்கு மேல்., 216 கிலோ மீட்டருக்கு மேல் மட்டுமே கட்டண உயர்வாகும்.
Hindusthan Samachar / P YUVARAJ