Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.)
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
விடுதலைப் போராட்ட வீரராகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அயராது போராடிய போராளியாகவும் திகழ்ந்து, இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவராக விளங்கும் நல்லகண்ணுவின் 101-வது பிறந்தநாளில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் போது, எல்லா வெற்றியும் மகிழ்ச்சிக்கு உரியதல்ல என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்திய மகத்தான தலைவர்.
நேர்மையைப் பொதுவாழ்வின் நெறியாக வரித்துக்கொண்டு, எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடன் நிறைவாழ்வு வாழ்ந்திட மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b