தென்காசியில் ஈர நில பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
தென்காசி, 27 டிசம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், தென்காசி வன எல்லைப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஈர நில பறவைகள் கணக்கெடுக்கும் பணியானது தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இன்றும், நாளையும் நடைபெற உள்ள இந்த நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்ப
Aquatic Birds


தென்காசி, 27 டிசம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், தென்காசி வன எல்லைப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஈர நில பறவைகள் கணக்கெடுக்கும் பணியானது தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, இன்றும், நாளையும் நடைபெற உள்ள இந்த நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு குறித்தான பணியினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தொடங்கி வைத்த நிலையில், அவருடன் வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

குறிப்பாக, இந்த ஈர நில பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர்கள், மாணவர்கள், வனத்துறை ஊழியர்கள் என பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது முதற்கட்டமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் வாழும் பறவைகள் குறித்தான கணக்கெடுக்கும் பணி நடைபெறும் எனவும், இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த பணியில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய பறவைகள் இனங்கள் மற்றும் புதிதாக ஏதேனும் பறவைகள் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளதா என்பது குறித்தான முடிவுகள் நாளை தெரிவிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சிவகிரி, ஆலங்குளம் உள்ளிட்ட வன எல்லை பகுதிக்குட்பட்ட பகுதியில் இந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணியானது தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN