Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.)
தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை, ஆட்சிக்காலம் முடியும் நிலையிலும் நிறைவேற்ற முடியாத விளம்பர மாடல் அரசு என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்கள் போராட்ட களத்துக்கு வரும்போது காவல்துறையை வைத்து அராஜகத்திலும் அட்டூழியத்திலும் ஈடுபடுகிறது.
இடைநிலை ஆசிரியர்கள் இரு வேறு வகை ஊதிய முறையை விட்டு ஒரே வேலை பார்க்கும் அனைவருக்கும் சம ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தினார்கள்.
இந்தப் போராட்டத்தை காவல்துறையை வைத்து நசுக்க முயன்று மக்கள் மத்தியில் அம்பலமாகி நிற்கிறது திமுக அரசு.
ஆசிரியர்கள் என்றும் பாராமல் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று, அவர்கள் செய்தியாளரிடம் தங்கள் கோரிக்கையை சொல்லக் கூட விடாமல் மைக் முன் போலீசார் தடுப்பு அரணாக நின்று இந்தக் கையாலாகாத அரசை காப்பாற்ற நினைக்கிறார்கள்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம் என ஒவ்வொரு போராட்டத்தையும் நசுக்க முயன்று தோல்வி அடைகிறது விளம்பர மாடல் அரசு.
ஒரு பக்கம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் குழுக்கள் மூலமாக சென்டிமென்ட் நிகழ்ச்சிகள் நடத்தி, தன்னைத்தானே முன்னிறுத்திக் கொள்ளும் ஸ்டாலின் அவர்களின் பிம்பம், இது போன்ற போராட்டங்கள் மூலமாக உடைத்தெறியப்படுகிறது.
தேர்தல் மூலம் சுத்தமாக துடைத்தெறியப்படும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ