தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐயப்பன் மண்டல பூஜை நிறைவு விழா
தூத்துக்குடி, 27 டிசம்பர் (ஹி.ச.) தூத்துக்குடியில் மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவிலில் ஒன்றாக உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா இன்று (டிசம்பர் 27) காலை
தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐயப்பன் மண்டல பூஜை நிறைவு விழா


தூத்துக்குடி, 27 டிசம்பர் (ஹி.ச.)

தூத்துக்குடியில் மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவிலில் ஒன்றாக உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா இன்று

(டிசம்பர் 27) காலை 5 மணிக்கு தொடங்கியது.

இதைமுன்னிட்டு விக்னேஷ்வர பூஜை, வருண கும்ப பூஜை, மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள், மகா அபிஷேகம் நடைபெற்றது.

அதன் பின்பு ஐயப்பனுக்கு அங்காரம் தீபாரனை நடந்தது.

விழாவில் 2000 பேருக்கு மெகா அன்னதானம் நடைபெற்றது. மாலையில் புஷ்பாஞ்சலி பஜனை அலங்கார தீபாரணை நடைபெற்றது.

பூஜைகளை பிரதான பட்டர் கண்ணன் செய்திருந்தார்.

இதில் சிவன் கோவில் ஐயப்பன் குருசாமி ஆறுமுக நயினார், அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சரவணன் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஜீவா பாண்டியன், விக்னேஷ் பாண்டியன், கோவில் அறங்காவலர் முன்னாள் தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமார்.

அமைச்சரின் நேர்முக உதவியாளர் கல்யாண சுந்தரம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b