Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச)
சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் எரிந்து சேதம் ஏற்பட்டது.
முதல் இரண்டு தளங்களில் வீட்டை வாடகைக்கு விட்டு மொட்டை மாடியில் தகரத்தாலான ஷெட் அமைத்து தனது குடும்பத்தோடு சரவணன் வசித்து வந்த நிலையில், நேற்று மாலை குடும்பத்தினரோடு வெளியில் சென்றுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் அவரது வீட்டில் இருந்த டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களும், தனது மகனின் பள்ளி கட்டணம் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 88 ஆயிரம் பணமும் எரிந்து முற்றிலும் சேதமானது.
தீ விபத்து காரணம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்து நடந்த போது வீட்டில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக யாருக்கும் எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை.
Hindusthan Samachar / P YUVARAJ