Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச)
தேமுதிகவின் தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் பேசியபோது,
தேமுதிகவின் தலைவர் மறைந்த விஜயகாந்தின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழன் மாநில காங்கிரஸ் சார்பில் அவர்களுக்கு மரியாதை செலுத்தி இருக்கிறோம் அவர்கள் விட்டுச் சென்ற பெண்மணி மனிதநேயம் மக்கள் பணி அவரது குடும்பத்தாரும் இயக்கத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறார்கள். இனிமேலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது நாட்களும் இல்லை தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் சிறப்பாக இருக்கிறது நிச்சயம் வெற்றி பெறும்.
இன்னும் ஓரிரு மாதங்களில் இன்னும் பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இணைய உள்ளார்கள் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது மேலும் கூட்டணி பலம் அதிகரித்துக் கொண்டே போகும் அரசியலுக்கு அப்பாற்பட்டு கேப்டன் மீது வைத்துள்ள மரியாதையின் காரணமாக மூப்பனாருக்கும் கேப்டனுக்கும் ஆழமான இருந்ததால் குடும்ப அடிப்படையில் இங்கு வந்தேன் என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ