Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 27 டிசம்பர் (ஹி.ச.)
காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் புதுடெல்லியில் இன்று
(டிசம்பர் 27) கூடியது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது,
இன்றைய கூட்டத்தில் நாங்கள் அனைவரும் ஓர் உறுதிமொழியை ஏற்றோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான பிரச்சாரத்தை நாடு முழுவதும் மேற்கொள்வது என்றும், இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவது என்றும் முடிவு செய்துள்ளோம். இதற்கான பிரச்சாரம் ஜனவரி 5-ம் தேதி தொடங்கப்படும்.
காங்கிரஸ் கட்சி இந்த இயக்கத்தை வழிநடத்தும்.
எந்த விலை கொடுத்தாவது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நாங்கள் பாதுகாப்போம்.
இது வெறும் திட்டமல்ல, இந்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலை செய்வதற்கான உரிமை.
இந்தத் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கும் சதி திட்டத்தை ஜனநாயக ரீதியாக எதிர்ப்போம் என்றும் நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b