Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 27 டிசம்பர் (ஹி.ச.)
மதுரையிலிருந்து அருகே உள்ள பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் மெமு ரயில்கள் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான பல்வேறு ரயில் திட்டங்களை முன் வைத்து, அகில பாரதிய கிரஹாக் பஞ்சாயத்து நிர்வாகிகள் மதுரை கோட்ட ரயில்வே மேலாளரிடம் மனு அளித்துள்ளனர்.
அகில பாரதிய கிரஹாக் பஞ்சாயத்து அமைப்பின் நிர்வாகிகள், மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய ரயில் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனாவிடம் வழங்கினர்.
இதனை பெற்றுக் கொண்ட ரயில்வே கோட்ட மேலாளர் இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கக்கபடும் என உறுதி அளித்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து பேட்டி அளித்த ABGP அமைப்பின் நிர்வாகி அருண்பாண்டியன்,
வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களை இணைக்கக் கூடிய முக்கிய நகரமாக மதுரை திகழ்கிறது. மதுரையிலிருந்து நெல்லை, தூத்துக்குடி, ராமேஸ்வரம், தென்காசி, திருச்சி ஆகியவை 160 கி.மீ.க்குள், அதிகபட்சம் 3 மணி நேர பயணத்திற்குள் உட்பட்டவை.
இந்த இடங்களுக்கு மதுரையிலிருந்து மெமு ரயில்கள் இயக்க வேண்டும். கூடல்நகரில் மெமு ரயில்களுக்கான 'ஷெட்' அமைத்து, அதனை மெமு ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN