Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 27 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக பா.ஜக தலைவர்நயினார் நாகேந்திரன், “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார்.
அதன்
ஒரு பகுதியாக இன்று ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாஜக பொதுச்செயலாளர் முருகானந்தம், அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போதுபொதுமக்களிடையே உரையாற்றிய நயினார் நாகேந்திரன் பேசியதாவது;
1977 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் கட்சி தொடங்கி வெற்றி பெற்ற போது, முதல் வெற்றி செய்தி தமிழகத்தில் தேர்தல் முடிந்து கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் கே ஏ செங்கோட்டையன் வெற்றி பெற்றார் என்பதுதான்
முதல் செய்தியாக இருந்தது.
அதிமுக கூட்டணியின் ராசி, அதிமுக கூட்டணியில் செங்கோட்டையன் இருந்து இருந்தால் இந்த இடம் அவருக்கு ராசி, என்றும் நான் மதிப்பு மரியாதை வைத்திருக்க கூடியவர் செங்கோட்டையன்.
1996 ஆம் ஆண்டு பல்வேறு வழக்குகள் அவர் மீது போடப்பட்டு சேலத்தில் இருந்து நாகர்கோவில் தங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டது.
அன்றையிலிருந்து அவர் கூடயே நான் பயணித்தேன். 1998 ஆம் ஆண்டு திருநெல்வேலி வெற்றி விழா மாநாட்டின் போது,
நானும் செங்கோட்டையன் சேர்ந்துதான் உழவு கமிட்டியில் என் வீட்டில் தான் அவர் தங்கி இருந்தார்.
புரட்சித்தலைவி ஜெயலலிதா அவரைத்தான் அழைத்துச் செல்வார், செங்கோட்டையன் நல்ல உழைப்பாளி, மிகப்பெரிய இடத்தில் இருந்தவர், இன்று ஒரு இடத்துக்கு சென்று சேர்ந்திருக்கிறார், அவருக்கு என்னுடைய வணக்கங்கள்.
டாஸ்மார்க் படிப்படியாக குறைப்போம் என்று சொன்னார்கள். ஆனால் படிப்படியாக
இப்போது எண்ணிக்கையை கூட்டி இருக்கிறார்கள்.
தற்போது திட்டம் போடுவது இந்த
பொங்கலுக்கு எத்தனை கோடி ரூபாய் மதுவிற்பனை செய்ய வேண்டும், அடுத்த தீபாவளிக்கு எத்தனை கோடி ரூபாய்க்கு மது விற்பனை, போன தீபாவளி விட இந்த தீபாவளிக்கு கூடுதல் விற்பனை செய்ய வேண்டும் என திட்டம் போடுகிறார்கள், அந்த
அளவுக்கு மோசமான ஆட்சி நடக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சொத்து வரி, மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தி
உள்ளது, இப்போது மின் கட்டணம் பில்லை பார்த்தாலே ஷாக் அடிக்கும் அளவுக்கு மோசமான ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
பவானி ஜமுக்காளம் நெசவாளர்கள், 10 வருடங்களுக்கு முன்பு நூறு நெசவாளர்கள் இருந்த நிலையில், தற்போது 13 பேர் தான் இருக்கிறார்கள். மத்திய அரசு பவானி
ஜமுக்களத்திற்கு புவிசார் குறியீடு பெற்ற கொடுத்த போதும், நெசவாளர்களுக்கு கூலி உயர்வு கொடுக்கவில்லை.
விசைத்தறி நெசவாளர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடங்கி விட்டதாக திமுக கூட்டணி போராட்டம் நடத்துகிறார்கள்.
ஆனால் மத்திய அரசு திட்டத்தை நிறுத்தவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக 1200 பேர் வழக்கு போட்டு இருக்கிறார்கள்.
அதனால் தான் மத்திய அரசு நிதியை நிறுத்தி உள்ளது.
மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை 125 நாளாக உயர்த்தியிருக்கிறது.
ஊதியத்தை வாரந்தோறும் பெற்று தரும் வகையிலும் கொண்டு வந்திருக்கிறது. இதில் பயோமெட்ரிக் சிஸ்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் 95 லட்சம் பேர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில்
முதல்வர் தொகுதி மட்டும் ஒரு லட்சம் பேர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். எனது
தொகுதியில் 40 ஆயிரம் பேர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் 2002 ஆம் ஆண்டு யாரெல்லாம்இருந்தார்களோ அவர்களெல்லாம் இதுவரை உயிரோடு
இறக்கிறார்கள். இதனால் தான் பீகாரர்கள் கண்டுபிடித்து நீக்கப்பட்டார்கள்.
பீகாரில் பாஜகவில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக மட்டும் 1995 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து 5 வருடத்தில் 8 மத்திய அமைச்சர்கள் கோடி கோடியாக கொள்ளையடித்தார்கள். அப்போது பாஜக இனிக்கவா செய்தது.
அதிமுக, பாஜக கூட்டணி மக்களுக்கான கூட்டணி, மக்கள் நலனுக்கான கூட்டணி, மக்களை பற்றி சிந்திக்க கூட்டணி, மக்களை நேசிக்கும் தலைவர்கள் இருக்கக்கூடிய கூட்டணி.
அமித்ஷா உட்பட யார் மேலாவது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா? ஆனால்
இன்று திமுக அமைச்சரவையில் 17 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது.
மக்களைப் பற்றி கவலை இல்லை, திமுக ஆட்சியில் 42 லாக்அப் மரணங்கள்
நடந்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள் இருக்கிறது. 700க்கும் மேற்பட்ட படுகொலைகள், குழந்தைகளுக்கு எதிரான 15 சதவீதம் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது.
சட்ட ஒழுங்கு சரியாக இல்லை, எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதைப்பொருட்கள்.
41% இருந்த திமுகவின் செல்வாக்கு 30 சதவீதமாக குறைந்துள்ளது என
கருத்துக்கணிப்புகள் வந்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி வாக்கு 36 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. திமுகவின் செல்வாக்கு குறைய குறைய தேசிய ஜனநாயக கூட்டணி அதிக செல்வாக்கை பெற்று அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றார்.
1995 ஆம்
ஆண்டு திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து, 5 வருடத்தில் 8 மத்திய அமைச்சருடன்
கோடி கோடியாக கொள்ளையடித்தார்கள். அப்போது பாஜக இனிக்கவா செய்தது என்றார்.
Hindusthan Samachar / GOKILA arumugam