கார்வார் துறைமுகத்தில் இருந்து நாளை நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடலில் பயணம்
புதுடெல்லி, 27 டிசம்பர் (ஹி.ச.) ஜனாதிபதி திரௌபதி முர்மு கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்படி முதற்கட்டமாக இன்று மாலை அவர் கோவா செல்கிறார். தொடர்ந்து தனது பயணத்தின் ஒரு பகுதி
நாளை கார்வார் துறைமுகத்தில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடலில் பயணம்


புதுடெல்லி, 27 டிசம்பர் (ஹி.ச.)

ஜனாதிபதி திரௌபதி முர்மு கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதன்படி முதற்கட்டமாக இன்று மாலை அவர் கோவா செல்கிறார்.

தொடர்ந்து தனது பயணத்தின் ஒரு பகுதியாக 28-ந்தேதி(நாளை) கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடலில் பயணிக்க உள்ளார்.

தொடர்ந்து 29-ந்தேதி ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்வி மையத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM