கோவையில் இளம்பெண் செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பிய ராப்பிடோ ஓட்டுநர் -பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார்!
கோவை, 27 டிசம்பர் (ஹி.ச. கடந்த செப்டம்பர் மாதம் கோவை சௌரிபாளையம் பகுதியில் இருந்து ராமநாதபுரம் செல்வதற்காக இளம் பெண் ஒருவர் ராப்பிடோ இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்து அதில் பயணம் செய்துள்ளார். பயண கட்டணமாக 40 ரூபாய் செலுத்த வேண்டும் என கூறிய நி
ராப்பிடோ


கோவை, 27 டிசம்பர் (ஹி.ச.

கடந்த செப்டம்பர் மாதம் கோவை சௌரிபாளையம் பகுதியில் இருந்து ராமநாதபுரம் செல்வதற்காக இளம் பெண் ஒருவர் ராப்பிடோ இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்து அதில் பயணம் செய்துள்ளார்.

பயண கட்டணமாக 40 ரூபாய் செலுத்த வேண்டும் என கூறிய நிலையில் ரேப்பிடோ ஓட்டி வந்த நபருக்கு போன் பே மூலம் 40 ரூபாயை அனுப்பியுள்ளார் அந்த இளம் பெண்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்

பெண்ணுக்கு போன் பே ஆப்பில் ஆபாச புகைப்படம் ஒன்று வந்துள்ளது.

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் புகைப்படம் பகிரப்பட்ட எண்ணை ஆய்வு செய்ததில் அந்த எண்

கடந்த மாதம் இளம் பெண் பயணம் செய்த ராப்பிடோ இரு சக்கர வாகன ஓட்டுனரின் எண்

என்பது தெரிய வந்தது.

மேலும் அந்த ஓட்டுனரின் பெயரை வைத்து அவரது முகநூல் பக்கத்தை பார்த்தபோது அதில் ஆபாச இணையதளங்களின் முகவரிகள் மற்றும் ஆபாச

புகைப்படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இது தொடர்பாக இன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் சூழலில் ரேப்பிடோ இருசக்கர வாகனத்தில்

பயணித்த இளம் பெண்ணுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய ரேப்பிடோ ஓட்டுனரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam