Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் என ஸ்டாலின் கூறினார்
ஆனால் தற்போது சாலையில் கழிவு நீர் தான் ஓடுகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஏற்பட்டுள்ள பரிதாப நிலையை பார்த்தால் நமக்கு கண்ணீரையும், வேதனையும் வர வைக்கிறது
இன்றைக்கு மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற வசதி அமைச்சகம் 2025 ஆண்டில் நடத்திய தூய்மை கணக்கெடுப்பில் இந்தியாவில் அசுத்தமான நகரம் பட்டியல் மதுரை முதலிடத்தில் இருப்பதுதான் மன உளைச்சலும், வேதனை நமக்கு ஏற்பட்டுள்ளது.
எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற அம்மாவின் ஆட்சியில் உலக அளவில் பெயர் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் தூய்மையான கோயிலாக விருது பெற்று பெருமை சேர்த்தது இப்படி புகழை கட்டிக் காத்த மதுரை இன்றைக்கு குப்பை நகரமாக மாறிவிட்டது.
மதுரை நகரில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு, குப்பைகள் தேக்கம், குடிநீர் உடைந்து வீணாகுதல், செப்டிக் டேங்க் உடைந்து வீதிகளில் கழிவு நீர் தேங்குதல், இதற்கெல்லாம் உடனடி தீர்வு ஏற்பட காலத்தால் சாலைகளில் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொன்னார் ஸ்டாலின் ஆனால் இன்றைக்கு மதுரை வீதியில் கழிவு நீர் தான் ஓடுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிய வீதிகளில் கழிவுநீர் ஆறுகள் போல ஓடுவதால் மக்கள் கடுமையாக அவதி வருகிறார்கள். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலம் இருந்தும், வெளிநாடு இருந்தும், உலகம் முழுவதும் பக்தர்கள்
வருகிறார்கள் இதை பார்த்து பக்தர்கள் வேதனை அடைந்து வருகிறார்கள்.
கோவில் யானை, கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் நிர்வாகிகள், சுவாமியை சுமக்கும் சீர்பாதங்கள் ஆகியோரெல்லாம் தேங்கிய கழிவு நீரை மிதித்து தான் கோயிலுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மார்கழி உற்சவத்தில் சுவாமி வைகையாற்றில் சுற்றி வந்த நிலையில், இன்றைக்கு திமுக ஆட்சியில் கழிவு நீரை சுற்றி வரும் நிலையை ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் இன்றைக்கு எதுக்கெடுத்தாலும் சவால் விடுகிறார், ஆனால் இன்றைக்கு கழிவு நீரை கூட அப்புறப்படுத்த நாதியில்லை,
பொதுமக்களை இதை நீங்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.
இந்த கழிவுநீரை பல மாதம் ஆகி அப்புறப்படுத்த கூட அரசுக்கு நேரமில்லை, இதனால் இன்றைக்கு அரசு முடங்கி போய், செயல்படாத அரசாக உள்ளது
இந்த அரசை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பி தமிழகத்திற்கு விடிவுகால பிறக்கும் வகையில் 2026 ஆண்டில் எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி மலர் செய்வதுதான் ஒரே தீர்வு என கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ