Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 27 டிசம்பர் (ஹி.ச.)
மகர விளக்கு மண்டல பூஜைக்காக சபரிமலை நடை கடந்த நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்டது, திறக்கப்பட்ட நாளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலைக்கு குவிந்து வருகின்றனர்.
இன்றுடன் மண்டல கால பூஜை நிறைவு பெறுகிறது, இன்று காலை 10.10 மணியிலிருந்து 11:30 மணி வரை 450சவரன் தங்க அங்கி ஐயப்பருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இன்றுடன் மண்டல கால பூஜை ஆனது நிறைவு பெறுகிறது, மேலும் இன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட உள்ளது டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 40 நாட்களில் மண்டல காலத்தை ஒட்டி ரூபாய் 332. 77 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தலைவர் கே ஜெயக்குமார் தற்போது தெரிவித்துள்ளார்.
முதல் ஒரு சில நாட்களில் ஏற்பட்ட குழப்பத்தை தவிர மற்ற அனைத்தும் சமூகமாக நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த 40 நாட்களில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த மண்டல சீசனை விட தற்போது அதிக அளவில் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மகர விளக்குகான ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்ய தேவசம்போர்டு அமைச்சர் வி.என் வாசன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை பம்பாவில் கூட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக வனத்துறையின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் வனத்துறை அமைச்சர் தலைமையில் 29ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இது தொடர்பாக கூட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam