அதிமுக கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்காமல் இருப்பது தான் பாசிசம் - அமைச்சர் சேகர்பாபு
சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.) சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயில் அருகே கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்ப கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் தமிழ்நாடு திருக்கோயில்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில்
சேகர்பாபு


சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயில் அருகே கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்ப கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் தமிழ்நாடு திருக்கோயில்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில் இரண்டாம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.

அந்த வாகனத்தின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

நேற்று சபரிமலை சென்றேன் அங்கு தமிழக பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை ஆய்வு செய்தேன். இதுவரை 2000 நபர்கள் அங்கு பயன்பெற்று உள்ளனர். அதே போல சென்னையிலும் சபரிமலை பற்றி தகவல் அறிய 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கடந்த ஆண்டு 15 லட்சம் பிஸ்கட் பாக்கெட் அனுப்பபட்டது. இந்த ஆண்டு இதுவரை 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட் அனுப்பட்டுள்ளது எனவும் தமிழகத்தில் 3956 திருக்கோயில்களுக்கு இந்த ஆட்சி வந்ததும் குடழுழக்கு நடந்துள்ளது எனவும் கூறினார். வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயில் குடமுழுக்கு 4 ஆயிரம் குடமுழுக்காக நடைபெறும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட்டு ஆன்றோர் சான்றோர்களிடம் இந்த துறை கொடுக்கப்படும் என எச்.ராஜா கூறியது குறித்தாக கேள்விக்கு, முதலில் அவர் ஏதாவது ஒரு தொகுதிகள் நின்று வெற்றி பெற வேண்டும், குறிப்பிட்டு சொல்கிறேன், சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் தேர்ந்தெடுக்க சொல்லுங்கள், திமுக சார்பாக சாதாரண தொண்டனை வைத்து அவரை மண்ணைகவ்வ வைப்பார் எனவும் அரசியல் செல்வாக்கு இல்லாதவர் கட்சியின் பெயரை வைத்துக்கொண்டு அறிக்கைகளை விட்டு அவரை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக பேசுகிறார் என தெரிவித்தார். அவர் இயக்கம் அவரைக் கண்டு கொள்ளவில்லை என தெரிவித்தார்.

தமிழகத்தில் எந்த போராட்டத்திற்கும் அரசு அனுமதி அளிப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாசிச அரசு என குறிப்பிட்டு குறித்தான கேள்விக்கு கட்சியை விட்டு விலகி சென்ற நபர்கள் கூட மீண்டும் கட்சியில் சேர்வதற்கு அவர் இணைக்காமல் இருப்பது தான் பாசிசம் அவர்தான் பாசிச அரசியல் செய்து வருகிறார் என தெரிவித்தார்.

நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில்.கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அதேபோல கலவரத்தை தமிழகத்தில் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் ஒருபோதும் இதனை தமிழக முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார் என கூறினார்.

ஏற்கனவே வெயிலோடு ஒருத்தர் சுற்றினால் தமிழகத்தில் முருகனுடைய அருள் எங்கள் முதலமைச்சர் பக்கம் இருக்கிறது ஜாதி மத இன மோதல்களை முதலமைச்சர் இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகிறார் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam