இரண்டு மாதத்திற்கு முன்பாகவே தொகுதி பங்கிட்டை முடித்தால் எளிதாக இருக்கும் - செல்வப்பெருந்தகை
சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச) சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் யசோதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ்
செல்வப்பெருந்தகை


சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச)

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் யசோதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது;

இந்தியாவில் என்றும் இல்லாத பல வரலாற்று திரிபுகள் நடந்து வருவதாகவும் பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது இந்திய இறையாண்மையின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று கூறிய அவர் பாஜக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என்றும் இது போன்று சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க ஒன்றிய அரசு பார்த்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர்

வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை அதற்கு ஏன் மோடி தன்னுடைய கண்டனத்தை தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர் எஸ்.ஐ.ஆர் விவாகரத்தில் தேர்தல் ஆணையம் தெளிவாகவும் மிகவும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தமிழ்நாட்டுக்கு விரைவில் வர உள்ளதாக கூறினார்.

பல மாநில கூட்டணியில் கடைசி நேரத்தில் தொகுதிகள் ஒதுக்குவதால் சிக்கல் இருக்கிறது. பீகாரில் நடந்தது. கூட்டணியில் இரண்டு மாதம் முன்பே சில வேலைகளை பேசி முடித்தால் தான் பிரச்சாரம் உள்ளிட்டவை மேற்கொள்ள முடியும். அதை தான் பொறுப்பாளர் என்ற முறையில் திமுக விடம் கிரிஷ் ஜோடங்கர் பேசி இருக்கிறார் எனவே திமுக விடம் முன் கூட்டியே பேச்சுவார்த்தை முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பொறுப்பாளர் வலியுறுத்தி இருக்கிறார் காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் கிரிஷ் ஜோடங்கர் என்பதால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை வலியுறுத்தி இருக்கிறார் என்றார்.

இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது, இந்தியாவை வழிநடத்த போவது இந்தியா கூட்டணி என்றும் திருச்சி வேலுசாமி பேசுவது அவருடைய சொந்த கருத்து என கூறிய அவர் வங்கதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ஆசிரியர்கள், செவிலியர்கள் துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைக்கு அரசு தீர்வு காணும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்த அவர் தமிழக முதல்வர் 80 சதவீத விழுக்காடு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றியுள்ளார். மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவார் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam