Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.)
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சி இருந்து வருகிறது. அதாவது இந்த வாரத்தில் தொடர்ந்து 3 நாட்களாக ஏற்றத்தில் வர்த்தகமான நிலையில் நேற்று சரிவடைந்துள்ளது.
ஆண்டு முடிவடையும் வேளையில், விடுமுறை காலம் காரணமாக சந்தையில் வர்த்தக அளவு குறைவாகவும், சந்தையின் போக்கு பலவீனமாகவும் காணப்படுகிறது. மூன்றாம் காலாண்டு வருவாய் காலம் தொடங்குவதற்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது.
இரண்டு முன்னணி ஐடி நிறுவனங்களான எச்சிஎல் டெக் மற்றும் டிசிஎஸ் ஆகியவை ஜனவரி 12 அன்று தங்களின் டிசம்பர் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.
இந்த நிலையில் ரிலிகேர் புரோக்கிங்கின் ஆராய்ச்சிப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் அஜித் மிஸ்ரா, குறுகிய காலத்தில் எந்தெந்த பங்குகளை வாங்கினால் லாபம் என முதலீட்டாளர்களுக்கு தெளிவாக தெரிவித்துள்ளார்.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தற்போதைய விலை: ரூ.1,674.70 ஆக உள்ளது.
இந்த பங்கை இப்போது வாங்கலாம். இதன் இலக்கு விலை: ரூ.1,780 , ஸ்டாப்லாஸ் ரூ. 1,620 என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கின் தற்போதைய விலை: ரூ.6,030 ஆகும்.
இந்த நிலையில் பங்கை வாங்கலாம். இதன் இலக்கு விலை: ரூ.6,470 என்றும், ஸ்டாப்லாஸ் ரூ.5,830 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கின் தற்போதைய விலை: ரூ.315.75 ஆகும்.
இதன் இலக்கு விலை: ரூ.365, ஸ்டாப்லாஸ் விலை ரூ.295 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM