Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 27 டிசம்பர் (ஹி.ச.)
திருப்பதியில் இம்மாதம் 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி துவங்கி ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு முதல் நாள் வரை மூன்று நாட்கள் இலவச தரிசன டோக்கன்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொண்டுவரும் பக்தர்களுக்கு மட்டுமே திருமலையில் தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 2ம் தேதி முதல் 8 ம் தேதி வரை ஏழு நாட்கள் திருப்பதி மலையில் நேரடி இலவச தரிசன நடைமுறை மட்டுமே அமலில் இருக்கும்.
இம்மாதம் 30 ம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை விஐபி பிரேக், மூத்த குடிமக்கள், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், வெளி நாடு வாழ் இந்தியர்கள் ஆகியோர் உள்ளிட்டோருக்கான முன்னுரிமை தரிசனம் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பக்தர்கள் கவனித்து செயல்பட தேவஸ்தான நிர்வாக அதிகாரி அணில் குமார் செங்கால் வேண்டுகோள் விடுத்துள்ளதாவது:
இம்மாதம் 30 ம் தேதி வைகுண்ட ஏகாதசி,31ஆம் தேதி துவாதசி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி ஆங்கில புத்தாண்டு துவக்க நாள் ஆகிய நாட்களில் ஏழுமலையானை வழிபடுவதற்கு தேவையான இலவச தரிசன டோக்கன்களை தேவஸ்தான நிர்வாகம் ஏற்கனவே ஆன்லைனில் வெளியிட்டு பக்தர்களுக்கு வழங்கிவிட்டது.
மூன்று நாட்களுக்கும் சேர்த்து டோக்கன்களை பெற சுமார் 24 லட்சம் பக்தர்கள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்த நிலையில் அவர்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட குலுக்கள் அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் செய்தியாளர்களுடன் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால்,
இம்மாதம்30,31, ஜனவரி 1 ஆகிய நாட்களில் ஏழுமலையானை வழிபடுவதற்காக ஆன்லைன் மூலம் இலவச தரிசன டோக்கன்களை பெற்ற பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக திருப்பதி மலைக்கு வரும்போது அவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.
அந்த மூன்று நாட்களும் இலவச தரிசன டோக்கன்களுடன் வரும் பக்தர்களுக்கு மட்டுமே ஏழுமலையான் தரிசன வாய்ப்பு கிடைக்கும்.
இரண்டாம் தேதி முதல் 8 ம் தேதி வரை 9 நாட்கள் திருப்பதி மலையில் நேரடி இலவச தரிசனம் நடைமுறை மட்டுமே அமலில் இருக்கும்.
எனவே அப்போது பக்தர்கள் நேரடியாக திருப்பதி மலைக்கு வந்து வரிசையில் சேர்ந்து காத்திருந்து ஏழுமலையானை வழிபட தடை ஏதுமில்லை.
இம்மாதம் 29ஆம் தேதி துவங்கி ஜனவரி மாதம் ஏழாம் தேதி காலை வரை திருப்பதியில் செயல்படும் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டிருக்கும்.
இம்மாதம் 30 ம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை விஐபி பிரேக், மூத்த குடிமக்கள், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள்,வெளி நாடு வாழ் இந்தியர்கள் ஆகியோர் உள்ளிட்டோருக்கான முன்னுரிமை தரிசனம் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் தேவஸ்தானத்தின் இந்த நிர்வாக நடைமுறையை கவனித்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam