முதல்வரின் பிம்பம் உடைந்தது - தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ்
தமிழ்நாடு, 27 டிசம்பர் (ஹி.ச.) முதல்வரின் பிம்பம் உடைந்தது என தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது; உடைகிறது ''ஈவன்ட் மேனேஜ்மென்ட்'' முதல்வரின் பிம்பம்! தான் கொடுத்த தேர
அருண்ராஜ்


தமிழ்நாடு, 27 டிசம்பர் (ஹி.ச.)

முதல்வரின் பிம்பம் உடைந்தது என தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது;

உடைகிறது 'ஈவன்ட் மேனேஜ்மென்ட்' முதல்வரின் பிம்பம்!

தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை, ஆட்சிக்காலம் முடியும் நிலையிலும் நிறைவேற்ற முடியாத விளம்பர மாடல் அரசு... அந்த.வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்கள் போராட்ட களத்துக்கு வரும்போது காவல்துறையை வைத்து அராஜகத்திலும் அட்டூழியத்திலும் ஈடுபடுகிறது.

இடைநிலை ஆசிரியர்கள் இரு வேறு வகை ஊதிய முறையை விட்டு ஒரே வேலை பார்க்கும் அனைவருக்கும் சம ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தினார்கள்.

இந்தப் போராட்டத்தை காவல்துறையை வைத்து நசுக்க முயன்று மக்கள் மத்தியில் அம்பலமாகி நிற்கிறது திமுக அரசு.

ஆசிரியர்கள் என்றும் பாராமல் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று, அவர்கள் செய்தியாளரிடம் தங்கள் கோரிக்கையை சொல்லக் கூட விடாமல் மைக் முன் போலீசார் தடுப்பு அரணாக நின்று இந்தக் கையாலாகாத அரசை காப்பாற்ற நினைக்கிறார்கள்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம் என ஒவ்வொரு போராட்டத்தையும் நசுக்க முயன்று தோல்வி அடைகிறது விளம்பர மாடல் அரசு.

ஒரு பக்கம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் குழுக்கள் மூலமாக சென்டிமென்ட் நிகழ்ச்சிகள் நடத்தி, தன்னைத்தானே முன்னிறுத்திக் கொள்ளும் ஸ்டாலின் அவர்களின் பிம்பம், இது போன்ற போராட்டங்கள் மூலமாக உடைத்தெறியப்படுகிறது!

தேர்தல் மூலம் சுத்தமாக துடைத்தெறியப்படும்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam