சபரிமலை செல்ல நரசபூர் - கொல்லம், சார்லபள்ளி - கொல்லம் என 2 சிறப்பு ரயில்கள் இயக்கம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.) கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகரஜோதி தரிசன காலங்களில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இ
சபரிமலை செல்ல நரசபூர் - கொல்லம், சார்லபள்ளி - கொல்லம் என 2  சிறப்பு ரயில்கள் இயக்கம் - ரயில்வே அறிவிப்பு


சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.)

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகரஜோதி தரிசன காலங்களில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இருமுடியுடன் சென்று தரிசித்து வருவது வழக்கம்.

அந்த வகையில் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதிக்கு, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி நரசபூர் - கொல்லம் ரயில், இன்று(டிசம்பர் 27) மதியம், 1:00 மணிக்கு புறப்பட்டு, விஜயவாடா, ரேணிகுண்டா, திருப்பதி, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே மறுநாள் இரவு, 10:00 மணிக்கு கொல்லத்தை அடையும்.

காலை, 8:30க்கு சேலம், 9:35க்கு ஈரோடு வந்து செல்லும். மறுமார்க்க ரயில், வரும், 29 அதிகாலை, 2:30க்கு கிளம்பி, அடுத்த நாள் மதியம், 12:30க்கு நரசபூரை அடையும். மதியம், 1:15க்கு ஈரோடு, 2:22க்கு சேலம் வந்து செல்லும்.

அது போல சார்லபள்ளி - கொல்லம் சிறப்பு ரயில், ஜன., 10 மற்றும் 17 காலை, 10:30க்கு புறப்பட்டு செகந்திராபாத், மந்திராலயம் சாலை, தர்மாவரம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே மறுநாள் இரவு, 10:00 மணிக்கு கொல்லத்தை அடையும். காலை, 8:30க்கு சேலம், 9:35க்கு ஈரோடு வந்து செல்லும்.

மறுமார்க்க ரயில், ஜன., 12 மற்றும் 19 அதிகாலை, 2:30க்கு கிளம்பி அடுத்தநாள் மதியம், 1:20க்கு சார்லபள்ளியை அடையும். மதியம், 1:15க்கு ஈரோடு, 2:22க்கு சேலம் வந்து செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b